செம…. தென் கொரிய திரைப்பட விழாவில் கமல் படம்…. மகிழ்ச்சியில் படக்குழு….!!!

சர்வதேச திரைப்பட விழாவில் ”விக்ரம்” திரைப்படம் திரையிடப்பட உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த ஜூன் 3ஆம் தேதி ரிலீசான திரைப்படம் ”விக்ரம்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

தெலுங்கு, மலையாளம் , கன்னட மொழிகளிலும் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து, பூஸான் சர்வதேச திரைப்பட விழாவில் ”விக்ரம்” திரைப்படம் திரையிடப்பட உள்ளது. ”இந்த திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்தை தேர்வு செய்த தேர்வு குழுவுக்கு நன்றி. மேலும், ரசிகர்களின் அன்புக்கும் பாராட்டுக்கும் நன்றி” என ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனலின் தலைமை நிர்வாகி திரு நாராயணன் கூறியுள்ளார்.