“செல்பி” எடுக்க ஓகே சொன்ன அக்சய் குமார்…. தேங்ஸ் கூறிய பிரித்திவிராஜ்….!!!!

நடிகர் பிரித்வி ராஜ் மலையாளத்தில் சுமார் 100 திரைப்படங்களை நடித்து முடித்துவிட்டார். இதையடுத்து பிரித்திவி ராஜ் புரொடக்சன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரித்தும் வருகிறார். அதோடு டைரக்டராக மாறி 2 படங்களையும் இயக்கிவிட்டார். மேலும் மலையாள மொழி தாண்டி, தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி பாலிவுட்டிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகிய டிரைவிங் லைசன்ஸ் என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

அதனை தொடர்ந்து தற்போது இப்படம் இந்தியில் அக்சய் குமார், இம்ரான் காஸ்மின் நடிப்பில் “செல்பி” என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தை இந்தியில் நடிகர் பிரித்திவி ராஜே தயாரித்தும் இருக்கிறார். விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது.

இதில் பங்கேற்று பிரித்வி ராஜ் பேசியதாவது “நானே அக்சய் குமாரை தொடர்புகொண்டு இந்த படம் பற்றி சொன்னேன். படத்தை பார்த்த அக்சய் குமார் உடனே இதை ரீமேக் செய்து நடிக்க ஒப்புக் கொண்டார். இதன் காரணமாக அவருக்கும் இப்படத்தை அப்படியே அதன் சாரம் கெடாமல் இந்திக்கு ஏற்றபடி மாற்றிய இயக்குனர் ராஜ் மேத்தாவிற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.

Leave a Reply