அதிகவிலைக்கு முகக் கவசம் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூட வேண்டாம், தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை, கர்நாடகா கேரளா எல்லை ஓரத்தில் உள்ள திரையரங்கு , வணிக வளாகம் மூட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பல பகுதிகளில் மாஸ்க் , சானிடைசர் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக ஏராளமான புகார் தமிழக அரசுக்கு வந்ததை தொடர்ந்து , முகக் கவசம் , சானிடைசர் , சோப்புகளை அதிக விலைக்கு விற்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. அதிக விலைக்கு விற்பனை செய்யும் நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் [email protected] என்று மின்னஞ்சல் கொடுத்துள்ள தமிழக அரசு TNLMCTS செயலி அல்லது 044-24321438 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.