12 மணி நேரம் மின்தடை…. அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி கடைவீதியில் மழை நீர் வடிகால் வாய்க்கால் பணி நடைபெறுவதால் மின் கம்பங்களை மாற்றி அமைத்து வருகின்றனர். இதனால் நேற்று காலை 9 மணிக்கு மின் விநியோகம் தடைபட்டது. இந்நிலையில் இரவு 8 மணியை கடந்தும் வேலை முடியாததால் மின்விநியோகம் செய்ய இயலவில்லை.

இதனால் கோபமடைந்த வியாபாரிகள் பணியை எப்போது முடித்து மின்விநியோகம் செய்வீர்கள்? என மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். அதற்கு அதிகாரிகள் இன்னும் 2 மணி நேரம் ஆகும் என கூறியதால் ஒப்பந்ததாரர்கள் திட்டமிட்டு பணியை மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டி வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் குறைந்த பணியாளர்களை கொண்டு பணியை செய்வதால் தான் காலதாமதம் ஏற்படுவதாக குற்றம் சாட்டினர். இதுகுறித்து அறிந்த போலீசார் மற்றும் பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் பணிகளை முடித்து மின்விநியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தனர். அதன் பிறகு வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.