“சேலம் செல்லும் ரயில்களுக்கு பலத்த பாதுகாப்பு “காவல்துறை அதிரடி !!..

கொள்ளையர்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க ஈரோடு முதல் சேலம் வரை செல்லக்கூடிய அனைத்து ரயில்களிலும் 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்

ஈரோடு வழியாக சேலம் செல்லக்கூடிய ரயில் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவது காரணத்தினால் சில பகுதிகளில் ரயில்கள் 20 கிலோ மீட்டருக்கும் குறைவான வேகத்தில் செல்கின்றன இதனை பயன்படுத்திக் கொண்டு கொள்ளையர்கள் சில நாட்களாக ரயில் பயணிகளிடம் தங்களது கைவரிசையை காட்டி வருவதாக புகார்கள் எழுந்து வந்தன

இதனைத் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை ஈரோடு முதல் சேலம் வரை செல்லக்கூடிய அனைத்து ரயில்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறையினர் முடிவு செய்து உள்ளனர் இந்நிலையில் துணை கண்காணிப்பாளர்  தலைமையில் ரயில் ஒன்றுக்கு 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது