“மீண்டும் எட்டுவழி சாலை “சேலம் விவசாயிகள் போராட்டம்..!!

எட்டு வழி சாலைக்கு எதிராக நாழிக்கல்பட்டியை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

சென்னை  to சேலம் எட்டு வழி சாலை மக்களுக்கு எதிரான திட்டம் என்றும் அதை செயல்படுத்துவதால் பல்வேறு விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு விவசாயிகள்  பாதிக்கப்படுவதாகவும் பல்வேறு தரப்பினர் சார்பில் பொதுநல வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் 8 வழி சாலை திட்டத்தை நடைமுறைப்படுத்த தடை விதித்தனர். இந்நிலையில் தமிழக அரசானது மீண்டும் 8 வழி சாலை திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

 இதனை அறிந்த உடன் சேலம் நாழிக்கல்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தொடர்ந்து மத்திய ,மாநில அரசுகள் தமிழகத்தை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.