ஓடும் பேருந்தில் குழந்தையின் தங்கச் செயின் பறிப்பு…..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் குழந்தையின் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்து தப்ப முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

போரூரைச் சேர்ந்த ரம்யா என்பவர் தனது குழந்தையுடன் புதுக்கோட்டையில் இருந்து பேருந்தில் வந்து கொண்டிருந்தார். கூட்டம் அதிக அதிகமாக இருந்ததால் அருகில் அமர்ந்து இருந்த பெண்ணிடம் தன்னுடைய குழந்தையை கொடுத்துள்ளார். சற்று நேரத்தில் குழந்தையின் கழுத்தில் சங்கிலி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

Image result for கைது

அப்போது அருகில்  இருந்த பெண் வேகமாக இறங்க முயற்சிப்பதைக் கண்டு அவரை அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் தங்க சங்கிலியை திருடியதாக அவர் ஒப்புக்கொண்டார்.இதையடுத்து ஊத்துக்கோட்டை சேர்ந்த சுவேதா என்ற அந்தப் பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.