உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற பிவி சிந்துவுக்கு கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. நேற்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இதையடுத்து தங்கம் வென்ற வீராங்கனை பி.வி சிந்து_க்கு பல்வேறு தரப்பினர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் தனது ட்விட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில் BWF உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றதற்காக பிவி சிந்துவுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் ஒரு உத்வேகம்! என்று பதிவிட்டுள்ளார்.
Congratulations @Pvsindhu1 for winning the Gold at the BWF World Championships. You are an inspiration! pic.twitter.com/DYu9UkrLIH
— Virender Sehwag (@virendersehwag) August 25, 2019