செம மாஸ்..! டைரக்டர் சங்கர்-ராம்சரணின் ஆர்சி 15 படத்தின் டைட்டில் வெளியீடு…. இணையத்தை தெறிக்க விடும் வீடியோ….!!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தற்போது கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 மற்றும் நடிகர் ராம்சரணை வைத்து ஆர்சி 15 போன்ற திரைப்படங்களை இயக்கி வருகிறார். ஆர்சி 15 திரைப்படத்தில் க்யாரா அத்வானி ஹீரோயினாக நடிக்க, எஸ்.ஜே சூர்யா மற்றும் அஞ்சலி போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் ராம்சரனின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று சங்கர் தன்னுடைய twitter பக்கத்தில் ஆர்சி 15 திரைப்படத்தின் டைட்டில் வீடியோவை வெளியிட்டுள்ளார். ஆர் சி 15 திரைப்படத்திற்கு ‘கேம் சேஞ்சர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டைட்டில் வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்த சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.