“பேனர்களுக்கு பதிலாக விதைப்பந்து” … அசத்திய அஜித் ரசிகர்கள் ..!!

நேர்கொண்ட பார்வை படத்தை பார்க்க சென்றவர்களுக்கு  விழுப்புரம் இளைஞர்கள் விதை பந்துகளை வழங்கினர்.

ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்டபார்வை . இந்த படம் இன்றைய தினத்தில் வெளியானது. இதனால் ரசிகர்கள் தியேட்டர்களில் அலையலையாய் படம் பார்க்க சென்றனர். இதில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே  இளைங்கர்கள்   மரம் நடுவது குறித்து ஊக்குவித்து வருகின்றனர்.

Image result for nerkondaparvai

இதனால், விழுப்புரத்தில் விதை விருட்சம் அறக்கட்டளை மற்றும் வானவில் விதை பந்துகள் சார்பாக இளைஞர்கள் அஜித்தின் நேர் கொண்ட பார்வை படத்தை பார்க்க சென்றவர்களுக்கு விதைப்பந்துகளை இலவசமாக வழங்கினர்.  இந்த  இரு குழுக்களும் குழு இணைந்து சுமார் பத்தாயிரம் விதை பந்துகளை இலவசமாக வழங்கினர் .

Image result for nerkondaparvai fans

மேலும் இந்த விதைப் பந்துகளை மரங்கள் இல்லாத இடங்களில் விதைக்கும்மாறு அறிவுரை  வழங்கினார். பின்னர், நடிகர்களுக்கு வழக்கம்போல் பேனர்கள் வைக்கும் வழக்கத்தை விடுத்து விதை பந்துகளை ரசிகர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக இளைஞர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.