அசூரனின் தாறுமாறான செகண்ட் லுக் … ரவுடிசத்தில் படம் பட்டையை கிளம்பும் ..!!

தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

வட சென்னையின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அடுத்த படம் அசுரன் . இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மஞ்சுவாரியார் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பாலாஜி சக்திவேல் , பிரகாஷ்ராஜ்,  பசுபதி , சுப்பிரமணிய சிவா, யோகிபாபு , ஆடுகளம் நரேன், பவண்  உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தூத்துக்குடி மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் எடுக்கப்பட்டது. அதன்பின்   படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் தொடர்ந்து  நடைபெற்று வருகின்றன . மேலும் இந்த படம் வரும் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Image result for asuran

இந்நிலையில் இன்று அசுரன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. குறிப்பாக ,  இரண்டு போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் , இந்த போஸ்டர் மூலம் படத்தின் எதிர்பார்ப்பு மிகவும் உயர்ந்துள்ளது.