“முடங்கி கிடக்கும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்” – டிடிவி தினகரன் ட்விட்..!!.!!  

ராமநாதபுரத்தில் முடங்கி கிடக்கும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடல் நீரை குடிநீராக்கும் புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதையே பழனிசாமி அரசு பெரிய விழா எடுத்து கொண்டாடி வரும் நிலையில் ராமநாதபுரத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள ஆலையே முடங்கியிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி கவலை அளிக்கிறது. அதனை உடனடியாக செயல்படுத்துவது உட்பட குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. ஒரு குடம் தண்ணீருக்காக மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் அலைகிறார்கள். குடிநீருக்காக இரவெல்லாம் கண்விழித்து கிடக்கிறார்கள். அதிலும் தலைநகர் சென்னையில் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு குடிக்க கூட தண்ணீர் இல்லாத அவலம் ஏற்பட்டிருக்கிறது.

Image result for டிடிவி தினகரன்

அவசர அவசரமாக இடத்தை சரி செய்து கடல்நீரை குடிநீராக்கும் புதிய ஆலைக்கு  பெரியவிழா எடுத்து அடிக்கல் நாட்டுகிறார்கள். இந்த ஆலை ஓராண்டுக்குப் பிறகு செயல்படும் என்று சொல்கிறார்கள். கூடவே தண்ணீர் பஞ்சமே இல்லை. வெறும் தட்டுப்பாடுதான் என கொஞ்சமும் கூட வாய் கூசாமல் பேசும் அமைச்சர்கள் முழுப் பூசணிக்காயையும் சோறே இல்லாமல் மறைக்கப் பார்கிறார்கள்.

இந்த நேரத்தில்தான் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் எந்திரங்கள் பழுதடைந்து கிடக்கின்றன. அதனை சீரமைக்க ரூ 20 லட்சம் நிதி ஒதுக்காததால் முடங்கி இருப்பதாக வெளியாகி உள்ள செய்தி வேதனை அளிக்கிறது. இந்த ஆலையை இயக்குவதற்கு உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.