மலைப்பகுதிகளில்பிளாஸ்டிக்கை தடை செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபோதும்,  அவை தாராளமாக கிடைப்பதாக மனுதாரர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதிகள், சதீஷ்குமார்,  பரதட்சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது,

பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள்,  தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் மீதான விசாரணையில் திண்டுக்கல் ஆட்சியர் அவர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.