திட்டி தீர்த்த மாமியார்….. விரக்தியில் 3 மகன்களுடன் தாய் தற்கொலை….. கடலூர் அருகே சோகம் …!!

கடலூர் அருகே மாமியார் திட்டியதால் மூன்று மகன்களுடன் தாய் விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியை  அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டியன். இவருக்கு திருமணமாகி அருள் மல்லி  என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் வீரபாண்டியன் குடும்பத்திற்காக உழைக்க சிங்கப்பூர் சென்றுவிட அருள்மல்லி  அவரது மாமியார் மற்றும் மகன்களுடன் பள்ளிப்பட்டிக்கு வசித்து வந்துள்ளார்.

எனவே மாமியார் மருமகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்றையதினம் ஏற்பட்ட தகராறில் மாமியார் கடுமையாக திட்டியுள்ளார். இதில் மனமுடைந்து அவர் தற்கொலை செய்ய நினைத்து முதலில் வீட்டில் இருந்த விஷ பாட்டிலை எடுத்து மூன்று மகன்களுக்கும் கொடுத்துவிட்டு பின் அவரும் குடித்து தற்கொலை முயற்சி செய்தார்.

பின்பு நான்கு பேரும் மயங்கி விழ அதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கிச் சென்றனர். அங்கு அவர்களுக்கு அவர்களுக்கு  முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக அவர்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தற்போது அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. இது குறித்து காவல் நிலைத்தில் தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.