விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வு… பால்வெளி மண்டலத்தில் புதிய கண்டுபிடிப்பு… வெளியான ஆச்சரிய தகவல்..!!

விஞ்ஞானிகள் ரேடியோ அலை சமிக்ஞைகளை பால்வெளி மண்டலத்திலிருந்து கண்டறிந்துள்ளனர்.

பால்வெளி மண்டலத்தில் நட்சத்திரங்களும், சூரியக் குடும்பமும், விண்கற்களும் இடம் பெற்றுள்ளது. மேலும் உயிரினங்கள் சூரிய குடும்பத்தில் மட்டும் வாழ்ந்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் விஞ்ஞானிகள் பால்வெளி மண்டலம் மற்றும் அதனை கடந்த வான் பகுதியில் உயிரினங்கள் ஏதேனும் வசித்து வருகிறதா என்று ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விஞ்ஞானிகள் ரேடியோ அலை சமிக்ஞைகளை பால்வெளி மண்டலத்தின் மத்தியிலிருந்து கண்டுபிடித்துள்ளனர். மேலும் விஞ்ஞானிகள் இந்த ரேடியோ அலைகள் குறைந்த அதிர்வெண் கொண்டதாகவும், நீண்ட தொலைவிலிருந்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த ரேடியோ சமிக்ஞைகளை டஞ்சு தேசிய விண்வெளி ஆய்வகம் மற்றும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பெஞ்சமின் போப் இணைந்து கண்டுபிடித்துள்ளனர். மேலும் விஞ்ஞானிகள் இந்த ரேடியோ சமிக்ஞைகள் 19 தொலைதூர சிவப்பு குறுங்கோள்களிடமிருந்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து ரேடியோ அலை சமிக்ஞைகளை குறைந்த அதிர்வெண் பகுப்பாய்வின் மூலம் கண்டறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் விஞ்ஞானிகள் கோள்களின் இருப்பு மற்றும் கோள்களின் காந்தபுலம் உள்ளிட்டவற்றை ரேடியோ அலைகளை ஆய்வு செய்வதன் மூலம் கண்டறிய இயலும் என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *