தமிழ்நாட்டில் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்…. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு.‌‌!!

தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

அந்த கோரிக்கையை அரசு தற்போது ஏற்றுள்ளது. அதன்படி ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். மேலும் கோடை வெப்பத்தின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply