பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை…!

சென்னை அருகே உள்ள பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியர் தூக்கு போட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை அடுத்து பாண்டியன் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நாகர்கோயிலைச் சேர்ந்த ஜெனிஃபர் என்ற ஆசிரியை பணியாற்றி வந்ததார். இவர் கடந்த ஒரு வருட காலமாக பள்ளி வளாகத்திலேயே தங்கி 9, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு பொருளியல் பாடம் எடுத்து வந்தார்.

தனியார் நீலாங்கரை பள்ளி வளாகம் க்கான பட முடிவு

இந்நிலையில் அவர் தங்கிய அறையில் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளியில் பணிபுரியும் சக ஊழியர்கள் வழக்கம் போல் ஆசிரியரை அழைப்பதற்கு கதவை தட்டினார்கள். நீண்ட நேரமாகியும் கதவை திறக்கபடாததால் சந்தேகமடைந்த பள்ளி ஊழியர்கள் அருகில் உள்ள நீலாங்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே விரைந்து வந்த போலீசார் பள்ளியின் கதவை உடைத்து ஆசிரியரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி ஆசிரியை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதி வைத்துள்ள கடிதத்தில் தன்னுடைய இறப்பிற்கு யாரும் காரணமில்லை என குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் தற்கொலைக்கான  காரணம் குறித்து ஆசிரியரின் சகோதரிடம் விசாரணை செய்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் ஆசிரியை  தூக்குபோட்டு கொண்ட  சம்பவத்தால் பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.