இது தேவையா..? பார்ட்டி கொண்டாடிய மாணவர்களுக்கு நேர்ந்த நிலை..!!

ஸ்பெயினில் உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவர்கள் பார்ட்டி நடத்தியதால் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு கொரோனா பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஸ்பெயினில் உள்ள உயர் நிலை பள்ளியில் பயிலும் மாணவர்கள், பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வுகள் முடிவடைந்ததால், மத்தியதரைக்கடல் மல்லோர்கா தீவில் கடந்த வாரம் பார்ட்டி கொண்டாடியுள்ளார்கள். இதில் ஆட்டம், பாட்டம், இசை நிகழ்ச்சி மற்றும் விருந்து என்று ஆரவாரமாக கொண்டாடியுள்ளனர்.

இந்த நிகழ்வில் ஸ்பெயின் மாணவர்கள், பிற நாடுகளிலிருந்து வந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களும் பங்கேற்றுள்ளனர். இதுதான் தற்போது பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. மிகப்பெரிய கொரோனா பரவலுக்கு இந்த கொண்டாட்டம் வழிவகுத்துள்ளது. மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நிகழ்வில் பங்கேற்ற 1200 நபர்களுக்கு கொரோனா உறுதியானது.

இதனால் அவர்களுடன் தொடர்பில் இருந்த 5000 பேர் தனிமையில் உள்ளனர். ஸ்பெயினில் இன்னும் பலருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்படவில்லை என்பதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *