தேர்வு பயம் தான் காரணமா….? மாணவியின் சாவில் மர்மம்…. கடலூரில் பரபரப்பு….!!!

10-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள புதுப்பேட்டை பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 10-ம் வகுப்பு படித்து வந்த ரசிகா என்ற மகள் இருந்துள்ளார். இதில் பொது தேர்வு எழுதி முடித்த ரசிகா முடிவுக்காக காத்திருந்தார். இந்நிலையில் அவர் தனது வீட்டில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரது உடலை கீழே இறக்கி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்காமல் அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் இறுதி சடங்கு செய்து உடலை தீ வைத்து எரித்து விட்டனர்.

இதுபற்றி தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரசிகாவின் உறவினர்களிடம் விசாரணை நடத்தியதோடு உடல் எரிக்கப்பட்ட இடத்திற்கு சென்று எலும்புகளை சேகரித்து உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாணவி தேர்வு பயத்தினால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *