“எனக்கு எங்க போகணும்னு தெரியல” பள்ளி செல்லாமல் சுற்றி திரிந்த சிறுவன்…. போலீசின் அதிரடி நடவடிக்கை….!!!

பள்ளிக்கு செல்லாமல் சுற்றித்திரிந்த மாணவனை மீட்டு காவல்துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள டவுன் பேருந்து நிலையத்திற்கு அரசு டவுன் பஸ் ஒன்று சென்றுள்ளது. அப்போது பேருந்தில் 13 வயது சிறுவனிடம் செல்ல வேண்டிய இடம் குறித்து கண்டக்டர் விசாரித்துள்ளார். அதற்கு அந்த சிறுவன் முன்னுக்கு முரணாக பதில் அளித்துள்ளார். மேலும் எங்கே இறங்க வேண்டும் என்று கேட்டதற்கு பதில் தெரியாமல் சிறுவன் முழித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த கண்டக்டர் மற்றும் டிரைவர் சிறுவனை மீட்டு தர்மபுரி டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

பின்னர் காவல்துறையினர் அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருவதும் பள்ளிக்கு செல்லாமல் சுற்றி திரிந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் சிறுவனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் சிறுவனை வரவழைத்து ஒழுங்காக பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *