அடப்பாவிங்களா இப்படி பண்ணிடிங்களே… பிளஸ் 2 மாணவர் கொடூர கொலை… திருச்சியில் பரபரப்பு…!!

திருவிழாவை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள தொட்டியம் பகுதியில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமார் என்ற மகன் உள்ளார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்தவாரம் தொட்டியம் பகுதியில் நடைபெறும் மதுரை காளியம்மன் கோவில் திருவிழாவிற்காக குமார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் திருவிழாவையொட்டி நடைபெற்ற வான வேடிக்கையை பார்ப்பதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு சென்ற குமாரை மர்ம கும்பல் வழிமறித்து அவரை கத்தியால் சரமாரியாக கழுத்து மற்றும் மார்பு பகுதியில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதனால் சம்பவ இடத்திலேயே குமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தொட்டியம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குமாரை எதற்காக கும்பல் கொலை செய்தது எனவும், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.