மாநில அளவிலான சிலம்ப போட்டி…. வெற்றி பெற்ற நெல்லை மாணவர்…. குவியும் பாராட்டுக்கள்…!!

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பாக மாநில அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் 17 வயதிற்கு உட்பட்ட மாணவர் பிரிவில் இரட்டை கம்பு வீச்சு போட்டியில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் எஸ்.ஏ.வி பாலகிருஷ்ணா பள்ளியில் படிக்கும் மாணவன் தனிஷ் ரோஷன் 3-வது இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றார். இந்த மாணவரை பள்ளியின் தாளாளர் திவாகரன், முதல்வர் சுடலையாண்டி மற்றும் பிற ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.