ஜம்முவில் 19-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரி திறப்பு ….!!

ஜம்முவில் வருகின்ற 19-ஆம் தேதி பள்ளி கல்லூரிகள் திறக்கபட்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெற்ற பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதாவை தாக்கல் செய்தார். பின்னர் இது மக்களவையிலும் , மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஜம்மு மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரிக்கப்பட்டது.

Image result for ஜம்மு

மத்திய அரசு இந்த விவகாரத்தை மிகவும் துணிச்சலுடன் எடுத்தது. ஆகஸ்ட் 5_ஆம் தேதிக்கு 1 வாரத்திற்கு முன்பு இருந்து ஜம்முவில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்ட்ன. பின்னர் பள்ளிகளுக்கு 10 நாட்களுக்கு முன்பாகவே விடுமுறை அறிவித்து 144 தடை உத்தரவை பிறப்பித்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது. தற்போது நேற்று ஜம்மு மற்றும் லடாக்கில் சுதந்திர தினமும் கொண்டாடப்பட்டது.

Image result for ஜம்மு லடாக்

மத்திய அரசு எடுத்த இந்த நடவடிக்கைக்கு அங்கு இருந்த கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டு வருகின்றது. 144 தடை நீக்கம் , மீண்டும் இணைய சேவை என மக்களின் வாழ்க்கை பரபரப்பு மத்தியில் இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டு இருக்கையில் , காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் வரும் 19ஆம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.