தமிழகத்தில் மாணவர்கள் உயர்கல்வியை தொடர அரசு சார்பில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு மாதமும் உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மாணவிகள் மத்தியில் உயர் கல்வி படிப்பை உறுதி செய்ய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.

இந்த நிலையில் பிளஸ் 2 மற்றும் பட்டய படிப்பை முடித்த எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு இலவச சுருக்கெழுத்து, கணினி, தட்டச்சு மற்றும் போட்டி தேர்வு பயிற்சிக்கான சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வயது வரம்பு 18 முதல் 27 வரை. பயிற்சி காலத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை மற்றும் இலவச போட்டி தேர்வு பயிற்சி புத்தகங்கள் மற்றும் எழுது பொருள்கள் வழங்கப்படும். இது குறித்த முழு விவரங்களுக்கு 0444-24615112 என்ற எண்ணிற்கு அழைக்கவும்