கல்லூரிகளில் படிக்கும் எஸ்சி மற்றும் எஸ்டி மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் படிக்கும் எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி ஆதரவுடன் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த உதவித்தொகை பெற விருப்பமுள்ள மாணவர்கள் மே 31ஆம் தேதிக்குள் https://tnadtwscholarship.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.