இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ வங்கியில் அதிக அளவிலான வட்டி வழங்கப்படுவதால் இங்கு வாடிக்கையாளர்களும் அதிகம். இந்த நிலையில் ரிசர்வ் வங்கியால் வங்கிகளுக்கு நிர்ணயிக்கப்படும் கடன் உள்ளிருப்பு விகிதமான MCLR ஐ, எஸ் பி ஐ வங்கி பத்து புள்ளிகள் (0.10) உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது.
இதனால் அந்த வங்கியில் நுகர்வோர் வாங்கிய வீடு மற்றும் வாகன கடன்கள் சற்று அதிகரிக்க கூடும். இந்த உயர்த்தப்பட்ட புதிய வட்டி விகிதம் ஆகஸ்ட் 15 இன்று முதல் அமலுக்கு வந்தது. எஸ் பி ஐ வங்கியின் இணையதள தகவலின் படி ஓராண்டுக்கான MCLR 8.85 சதவீதத்திலிருந்து 8.95 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.