இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது.  இந்த நிலையில் எஸ்பிஐ, வாடிக்கையாளர்களுக்கு ‘அமிர்த கலசம்’ என்ற பெயரில் அதிக வட்டி தரும் Fixed depoit திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் 400 நாட்களுக்கு 7.1% (ஆண்டுக்கு) வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 7.6% வட்டி. அமிர்த கலசம் என்ற இந்த சிறப்பான திட்டம் ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. பயனர்கள் உடனே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.