“இதற்கு நான் தான் காரணம்”… அதனால் ஸ்டாலினுக்கு என் மேல் கோபம்… எஸ் பி வேலுமணி பேட்டி..!!

இந்த ஆட்சி தொடர உறுதுணையாக இருந்ததற்கு நான் முக்கியமான காரணம் என்பதால் திமுக தலைவருக்கு என் மீது கோபம் என்று எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்..

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.. அப்போது அவர், திமுக அரசால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இன்று பொய் வழக்கு போட்டு, எனது வீடு, உறவினர்கள் வீடு மற்றும் சம்பந்தமில்லாத நிறைய இடங்களிலும் காவல்துறையை ஏவி சோதனை செய்தார்கள்.. குறிப்பாக அந்த நேரத்திலே எனக்கு உறுதுணையாக இருந்த எங்களது தலைவர்கள் அருமை அண்ணன் எடப்பாடி அவர்களுக்கும், அதேபோல அருமை அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கும், அதே போல எனக்கும்  என் குடும்பத்திற்கு உறுதுணையாக  இருந்த முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து பொறுப்பாளர்கள், குறிப்பாக கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட பொறுப்பாளர்கள் கூட்டணிக் கட்சி நண்பர்கள், பொதுமக்களுக்கு நன்றி.

அதே போல சென்னையிலும் நான் இருந்த பகுதியில் உள்ள தொண்டர்கள், தோழர்கள், சகோதரிகள் தமிழ்நாடு முழுவதும் எனக்கு ஆதரவு புரிந்த கழகத் தோழர்கள் பொதுமக்கள், கூட்டணிக் கட்சி நண்பர்கள் அத்தனை பேருக்கும் நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்..

தொடர்ந்து பேசிய அவர், கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதியிலும் எங்களுக்கு, கலகத்திற்கு வெற்றியை தந்தார்கள்.. 50 ஆண்டுகாலம் இல்லாத வளர்ச்சியை நான் 2016ஆம் ஆண்டு அமைச்சராக வந்த பின்னால் எங்கே 50ஆண்டு காலம் இல்லாத வளர்ச்சியை  புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இடமும், அண்ணன் எடப்பாடியார்  அவர்களிடமும், இன்றைக்கு  பெற்றுத்தந்ததால் கோவை மாவட்ட மக்கள் அங்கீகாரத்தை தந்தார்கள்..

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்கும் காரணத்தோடு இதை நடத்தி இருக்கிறார்கள். ஆகவே இதை சட்டரீதியாக நாங்கள் சந்திப்போம்.. சோதனை செய்யும்போது பத்திரிக்கை ஊடகத்தில் பார்த்தோம் 13,00,000 புடிச்சதா எங்கேயுமே வரல.. என் வீட்டுல, உறவினர்கள் வீட்டில எதுவுமே இல்லை.. எந்த எதுவுமே எடுக்கல.. ஆகவே அது வந்து ஒரு தவறான தகவல்..

அதேபோல இன்றைக்கு வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக பத்திரிகைகளில் போட்டாங்க.. அதுவும் தவறான தகவல்.. எது வேணாலும் இன்றைக்கு தவறான தகவல் கொடுத்து இருக்காங்க.. என்ன பொருத்த அளவுக்கு நான் அனைத்து மதத்தையும் மதிப்பவன், கடவுளை நம்புகிறவன்..

ஆகவே முழுமையாக நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. நாங்கள் நீதி அரசர்களை நம்புகிறோம்.. முழுமையாக அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்ட வழக்கு நீதிமன்றத்திலே சந்திப்போம் என்று தெரிவித்துக் கொண்டு என்றைக்கும் நான் கோவை மாவட்ட மக்களுக்காக எந்த சூழ்நிலை வந்தாலும் உறுதுணையாக இருப்பேன்..

அதேபோல உள்ளாட்சித் துறையில் இருக்கும் போது யாரும் செய்ய முடியாத அளவுக்கு 148  விருதினை பெற்று கொடுத்திருக்கிறோம்.. கிராம சாலைகள் அதிகமாக நான் இருக்கின்ற காலத்தில் போடப்பட்டது.. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உறுதுணையாக இருந்தார்கள்.. எடப்பாடி அவர்கள் உறுதுணையாக இருந்தார்கள்.. ஏழைகளுக்கு அதிகமான வீடுகளைக் கட்டிக் கொடுத்து இருக்கிறோம்.. அதிகமான கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவந்தோம்.. பல்வேறு சாதனைகள் செய்து இருக்கிறோம்..

அதனால் இதையெல்லாம் நாங்கள் செய்த சாதனை எல்லாம் சொல்வதற்கு, சப்போர்ட் பண்ணுவதற்கு ஆட்சியில் இருக்கும் போதும் எங்களுக்கு வந்து பத்திரிகைகள் அதிகமா சப்போர்ட் பண்ணல.. நாங்கள் செய்த சாதனைகள் குறிப்பாக எந்த காலத்திலும் சொல்லக்கூடிய அளவிற்கு அதிகமான திட்டங்களை தந்திருக்கிறோம்..

அதனால் கோவை மாவட்ட மக்கள் எங்களுக்கு பெரிய வெற்றியை தந்தார்கள்.. ஆகவே என்றைக்கும் கோவை மாவட்ட மக்களுக்கும், கழகத்திற்கும் அதேபோல அம்மா மறைந்த பின்னால் இந்த கலகம் ஒற்றுமையாக இருக்க இந்த ஆட்சி தொடர உறுதுணையாக இருந்ததற்கு நான் முக்கியமான காரணம்.. இதெல்லாம் தான் திமுக தலைவருக்கு என் மீது கோபம்.. ஆகவே இன்றைக்கு எனக்காக ஆதரவு கொடுத்த பத்திரிக்கை துறை, ஊடகத் துறை நண்பர்கள், என்னுடைய கழகத் தோழர்கள், பொதுமக்கள் அத்தனை பேருக்கும் நன்றி கூறுகிறேன் நன்றி வணக்கம் என்று கூறினார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *