போதை பொருள் கடத்தல் குற்றத்திற்காக சவுதியில் 43 பேர் தலை துண்டிப்பு …

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாலியல் குற்றத்திற்காக சவுதியில் 43 பேர் தலையை துண்டித்துள்ளது உலகநாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்  தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் அந்த பாலியல் வழக்கில் ஈடுபட்ட இளைஞர்களை குண்டர் சட்டத்தில் மட்டும் கைது செய்து காவல் துறையினரும் சிபிசிஐடியும் விசாரித்து வருகின்றனர் இந்நிலையில் விசாரணை மட்டுமே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை என்பது இன்றளவும் நிறைவேற்றப்படவில்லை

இதனையடுத்து தற்போது உலக நாடுகளில் குறிப்பாக சவூதி அரேபியாவில் கொலை கொள்ளை போதைப்பொருள் கடத்தல் மற்றும்  பாலியல் குற்றங்கள் போன்றவை கொடூரமான மன்னிக்க முடியாத குற்றமாக கருதபட்டு மரண தண்டனைகள் விதிக்கப்படும் இது பெரும்பாலானோர் அறிந்ததே

இந்நிலையில் சவுதியில் நடப்பாண்டில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 43 பேர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர் சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளில் போதைப்பொருள் பலாத்காரம் கொலை மற்றும் கொள்ளை போன்ற கொடிய குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது

இந்நிலையில் சவுதி அரேபியாவில் கடந்த ஒரு ஆண்டில் 172 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது இதனிடையே கடந்த மூன்று மாதங்களில் போதை பொருள் கடத்தியதாக 20 பேருக்கும் மதத்தை இழிவு படுத்துதல் தீவிரவாதம் பாலியல் குற்றச்சாட்டு காரணமாக 23 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது..