செயின்ட் லாரன்ஸ் ஆறு வழியாக…. சட்டவிரோதமாக நுழைய முயன்ற 6 பேர்…. அமெரிக்காவில் பெரும் சோகம்….!!!!

கனடா நாட்டின் எல்லையில் உள்ள செயின்ட் லாரன்ஸ் என்ற ஆறு வழியாக படகு மூலம் இந்திய மற்றும் ரோமானிய நாடுகளைச் சேர்ந்த ஏழு பேர் அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயற்சித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இந்திய மற்றும் ரோமானிய நாடுகளைச் சேர்ந்த ஏழு பேரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு குழந்தை மட்டும் மாயமாகி இருக்கின்றது. அந்த குழந்தையை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.