சட்ட விரோத செயல்…. 112 பேர் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 112 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது ஒரே நாளில் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா, புகையிலை பொருட்கள், மது பாட்டில்கள் விற்பனை செய்தவர்கள் மற்றும் பொது இடங்களில் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபடுபவர்கள் என தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 12 வழக்குகளும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 10 வழக்குகளும், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி இடங்களில் தலா 15 வழக்குகளும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 16 வழக்குகளும், மணியாட்சி உட்கோட்டத்தில் 14 வழக்குகளும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 10 வழக்குகளும், மதுவிலக்கு காவல் நிலையங்களில் 5 வழக்குகள் என 112 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 120 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்களிடமிருந்து 1250 மது பாட்டில்கள், கஞ்சா, புகையிலை பொருட்கள், இருசக்கர வாகனம் மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் ஆகியவை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *