சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் அட்டூழியம் …துப்பாக்கி சூட்டில் …22 வீரர்கள் பலியான சோகம் …!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில்  மாவோயிஸ்டுகள் , பாதுகாப்புப் படை வீரர்களுக்கிடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 22 வீரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

சத்தீஸ்கர்  மாநிலத்தில்  பிஜப்பூர்- சுக்மா   மாவட்ட  எல்லையிலுள்ள , காட்டுப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் தெரிந்தது. எனவே பாதுகாப்பு படையினர் காட்டுப்பகுதியில் மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தன. அப்போது மாவோயிஸ்டுகள் ,பாதுகாப்பு படைவீரர்களை நோக்கி துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டன. இதற்கு எதிராக பாதுகாப்பு படையினரும் மாவோயிஸ்டுகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.இவ்வாறு நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 பாதுகாப்பு படை வீரர்கள், மாவோயிஸ்டுகளால் சுட்டு  கொல்லப்பட்டனர்.

மேலும் 30 வீரர்கள் படுகாயமடைந்ததால் ,அவர்கள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் ஈடுபட்ட 21 பாதுகாப்பு படைவீரர்களை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு படையினர் ,துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் கூடுதல் வீரர்களுடன் , தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர் .அப்போது காணாமல் போன  21 வீரர்களும் சடலமாக மீட்கப்பட்டனர் .இதனால் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் மொத்தமாக 22 வீரர்கள்  உயிரிழந்த சம்பவம்  சோகத்தில்  ஆழ்த்தியது.