“சட்டவிரோதமான செயல்” 21 பேர் சிக்கிட்டாங்க…. கைது செய்த காவல்துறையினர்….!!

வெளிமாநிலங்களில் இருந்து கடத்திவரப்பட்ட 851 மதுபாட்டில்களை  காவல்துறையினர் பறிமுதல் செய்தன

வேலூர் மாவட்டத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை முன்னிட்டு மதுபானக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருக்கின்றது. இதனால் கள்ளச்சந்தையில் மது மற்றும் சாராயம் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில்   ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து மாவட்டம் முழுவதிலும் நடைபெற்ற சோதனையில் மது, சாராயம் விற்ற 21 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும்  வெளிமாநிலங்களில் இருந்து கடத்திவரப்பட்ட 851 மதுபாட்டில்களை  காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன்பின் 225 லிட்டர் சாராயம் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் உட்பட 7 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனைதொடர்ந்து தப்பி ஓடிய 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *