சசிகுமார் நடிக்கும் ”அயோத்தி”….. வெளியான புதிய அப்டேட்…..!!!

சசிகுமார் நடிக்கும் ‘அயோத்தி’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.

தமிழ் சினிமாவில் இயக்குனராக பிரபல நடிகராகவும் வலம் வருபவர் சசிகுமார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனையடுத்து, இவர் நடிப்பில் ராஜவம்சம், கொம்பு வச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய் போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளன.

மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் ”அயோத்தி”. இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ், போஸ் வெங்கட் மற்றும் பலர் நடிக்கின்றனர். மாதேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு என்.ஆர். ரகுநந்தன் இசையமைக்கிறார்.

சசிகுமார் நடிக்கும் ‛அயோத்தி' படம் ஆரம்பம் Entertainment பொழுதுபோக்கு

இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. மேலும், இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரை மற்றும் ராமேஸ்வரம் சுற்று வட்டார பகுதிகளில் நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *