சாராய கடத்தல்…. சோதனையில் சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தின் தனிப்படை காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல்துறையினர் ரங்கநாதபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் புதுச்சேரியில் இருந்து வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் வழிமறித்து அவர் கொண்டு வந்த சாக்கு மூட்டைகளை சோதனை செய்ததில் 500 சாராய பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர் விசாரணையில் அந்த வாலிபர் கிருஷ்ணா நகரில் வசிக்கும் தினகரன் என்பதும், புதுச்சேரியில் இருந்து சாராயத்தை கடத்தி வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து தினகரனை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து சாராய பாக்கெட்டுகளையும் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து கோட்டகுப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *