“கைதாகும் சரத்குமார் “நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

காசோலை மோசடி வழக்கில்  நடிகர் சரத்குமாருக்கு நீதிமன்றம் பிடிவாரண்டை  பிறப்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர்  ரேடியன் நிறுவனத்திடமிருந்து ரூபாய் 2 கோடி கடன் வாங்கினர் . அதை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வந்ததால் ரேடியன் நிறுவனம் இருவர் மீதும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் 6 மாதத்திற்குள் முடிக்க உத்தரவிட்ட  நிலையில் இந்த வழக்கு இன்று  விசாரணைக்கு   வந்தது. 

Image result for சரத்குமார்

இதில்    சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார்  நேரில் ஆஜராகததை  சுட்டிக்காட்டிய நீதிபதிகள்  ஜாமீனில்  வெளிவரக் கூடிய பிடிவாரண்ட்டை  பிறப்பித்து,  வழக்கை வருகின்ற ஜூலை 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர் .மேலும்  சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஜூலை 12க்குள்   நீதிமன்றத்தில் ஆஜராகி பிடிவாரண்டை ரத்து செய்யலாம் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.