சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய நபர்…. பறிமுதல் செய்த போலீஸ்….!!

சரக்கு வேனில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் கடத்தூர் காவல்துறையினருக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கவுண்டம்பாளையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த சரக்கு வேனை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில் சரக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் சரக்கு வேனை ஓட்டி வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ஒட்டர்கரட்டுப்பாளையம் பகுதியில் வசிக்கும் பிரசாந்த் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பிரசாந்தை கைது செய்ததோடு அவரிடம் இருந்த 31\2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர்.