பலரும் அறிந்திருக்க மாட்டீர்கள்… சாப்பிட்டவுடன் இப்படி செய்யாதீர்கள்.. பல பிரச்சனைகளை தடுத்து விடலாம்..!!

சாப்பிடும் உணவை மட்டும் கருத்தில் கொண்டு சாப்பிடுவது மிகவும் நல்லது..சாப்பிட உடனே செய்ய கூடாத விஷியங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்…

சாப்பிட்டவுடன் செய்யக் கூடிய சில விஷயங்கள் பல உடல் நல கோளாறுகளை ஏற்படுத்துகிறது, என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அப்படி நாம் என்ன செய்கிறோம் , அவைகளால் நமக்கு என்னென்ன பிரச்சனைகள் வருகிறது. என்று தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

சாப்பிட்டவுடன் செய்யக் கூடாத சில விஷயங்களைப் பற்றி தான் பார்க்க போகிறோம். என்ன சாப்பிட்ட உடனேயே குளிக்க  கூடாது. ஆனால்  சில பேர் வேகவேகமா வேலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக சாப்பிட்ட உடனே குளிக்க போயிறாங்க.

 சாப்பிட்டவுடன் குளிக்க கூடாது:

நம்ம உடம்ப பொருத்தவரைக்கும் சாப்பிட ஆரம்பித்த உடனேயே செரிமான பணிகள் தொடங்க ஆரம்பித்து விடும். ஆனால் நாம் சாப்பிட்ட உடன் குளிக்கும்போது கை கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் செரிமான உறுப்புகளுக்கு தேவையான ரத்த ஓட்டம் குறைந்து செரிமான மந்தநிலை மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

நாளடைவில் செரிமான உறுப்புகளும் பலம் இழந்து விடும். இதனால் சாப்பிட்ட உடன் குளிக்க கூடாது. சாப்பிட்ட அரை மணி நேரம் கழித்து அல்லது முன்பு தான் குளிக்க வேண்டும்.

பழங்கள் சாப்பிட்டவுடன் உண்ணக்கூடாது:

சாப்பிட்ட உடன் பழங்கள் சாப்பிடக்கூடாது. நிறைய பேர்  சாப்பிட்ட உடன் பழங்கள் சாப்பிடுவது ரொம்ப நல்லது என்று நினைக்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. பழங்கள் எளிதில் ஜீரணமாகக் கூடியது. அதனால் பழங்கள் தான் முதலில் உண்ணவேண்டும்.

சாப்பிட்ட உணவு செரிமானம் அடையாமல் ஃபுட் பாய்சன் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். சாப்பிட்டவுடன் பழங்கள் சாப்பிடக்கூடாது உணவு சாப்பிடுவதற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன்போ அல்லது பின்போ பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.

பொதுவாக பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனென்றால் உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் செரிமான உறுப்புகளில் உள்ள கிருமிகள் வெளியேற உதவியாக இருக்கும்.

சாப்பிட்ட உடன் தூங்கக்கூடாது:

சாப்பிட்ட உடன் தூங்குவது மிகவும் தவறு. பொதுவாக சாப்பிட ஆரம்பித்த உடனேயே செரிமான பணிகள் வேகமாக நடைபெற ஆரம்பித்துவிடும். அதனால் தூங்கும் பொழுது, அப்படின்னா உணவு தொண்டையை நோக்கி வர ஆரம்பிக்கும்.

அது மட்டுமில்லாமல் இன்னும் சில பேருக்கு வயிற்றில் உள்ள செரிமான அமிலங்கள் தொண்டை வரையிலும், தொண்டை எரிச்சல் , தொண்டைப்புண், மூச்சுக்குழல் அலர்ஜி, போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். சாப்பிட்ட உடன் சரியாக செரிமானமடையாமல் வாய்வு பிற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும் சாப்பிட்ட உடனே தூங்கச் செல்லக்கூடாது.

சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்யக்கூடாது:

சாப்பிட்ட உடனே வேகமாக நடப்பது, ஓடுவது மற்றும்  கடினமான வேலைகளை செய்யக்கூடாது. சாப்பிட்ட உடன் உடற்பயிற்சி செய்யும்பொழுது சாப்பிட்ட உணவில் உள்ள சத்துகள் உடலில் போய் சேருவது தடைப்படும். உடற்பயிற்சி செய்யும் பொழுது தசைகள் மற்றும் பிற பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும்.

செரிமான உறுப்புகளில் ரத்த ஓட்டம் குறைவாக இருப்பதன் காரணமாக செரிமானம் நிலை மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். அதனால் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் உணவிலுள்ள சத்துக்கள் உடலில் போய் சேராது. அதனால சாப்பிட்ட உடனேயே உடற்பயிற்சி செய்யக்கூடாது.

காலையில் வெறும் வயிற்றில் அல்லது மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது ரொம்ப நல்லது.

சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்கக்கூடாது:

நிறைய பேர் சாப்பிடும் போது தண்ணீர் குடித்துவிட்டு இருப்பாங்க, அதுமட்டுமில்லாம சாப்பிட்டு முடித்த பிறகும் வயிறு புடைக்க தண்ணீர் குடிப்பார்கள். அப்போது தான் உங்களுக்கு சாப்பிட்ட நிறையவே கிடைக்கும்..

பொதுவாக வயிற்றில் உள்ள அமிலமானது 1.5 லிருந்து 3 வரைக்கும் இருக்கும். இந்த அளவுதான் உணவு அமிலத்துடன் சேர்ந்து நன்கு செரிமானம் அடையும். ஆனால் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்கும் பொழுது வயிற்றில் செரிமானத்திற்கு தயாராக இருக்கும்.  இதனால் சாப்பிட்ட உணவு சரியாக செரிமானமடையாமல் செரிமான கோளாறுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

சாப்பிடும் பொழுது விக்கல், அதிக தாகம் ஏற்பட்டால் சிறிதளவு தண்ணீர் குடித்துவிட்டு சாப்பிடலாம்.  சாப்பிட்ட பின் அரை மணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது.

சாப்பிட்ட உடனே டீ, காபி குடிக்கக்கூடாது:

இது முற்றிலும் தவறு. டீ காப்பியில் உள்ள ஆபிசில் ஆக்சலேட் பைலட் போன்ற சத்துக்கள் நாம் சாப்பிட்ட உடன் நம்முடன் நம் உடம்பில் இருக்கக்கூடிய சத்துக்கள் உறிஞ்சப்பட்டுவதாக இருக்கும். இதனால் நாம் சாப்பிட்ட உணவில் இருக்கக்கூடிய சில முக்கியமான அத்தியாவசிய சத்துக்கள், உதாரணமாக அயன் போன்ற சத்துக்கள் உடலில் போய் சேர்வதை தடுத்து விடும்.

இதனால் டீ காபி சாப்பிட்ட உடனே குடிக்கக்கூடாது. பொதுவாகவே சாப்பிடும்பொழுது எதையாவது நினைத்துக் கொண்டு சாப்பிடுவது, டிவி பார்த்துக்கொண்டு சாப்பிடுவது, புத்தகம் படித்துக் கொண்டு சாப்பிடுவது, செல்போனைப் பார்த்துக் கொண்டே இருப்பது, பேசிக்கொண்டோ அல்லது சிரித்துக்கொண்டு சாப்பிடுவது இது போன்ற விஷயங்களை தவிர்ப்பதும் சிறப்பு. சில சமயங்களில் சாப்பி பொழுது  உணவு மூச்சு குழாய்களை அடைத்து உயிருக்கே ஆபத்தாக கூட முடியும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *