முதல்வர் மீது செருப்பு வீச்சு…… வைரலாகும் வீடியோ……!!

தஞ்சையில் பிரசாரம் செய்த முதல்வர் மீது செருப்பு வீசிய வீடியோ சமுக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் சூழலில் அதிமுக , திமுக என 5 முனை போட்டியாக தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிங்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் .

 

தமிழக முதல்வர் பிரச்சாரம் செய்யும் போது காலணி விச்சு

Gepostet von Dharmaraj Civil am Montag, 1. April 2019

இங்கு அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் என்.ஆர்.நடராஜன் ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரித்துக்கொண்டு இருக்கும் போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் முதல்வர் மீது செருப்பை தூக்கி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைதளத்தில் முதல்வர் மீது செருப்பு வீசும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது.