நடைபெற்ற தீவிர ரோந்து பணி…. சோதனையில் தெரியவந்த உண்மை…. கைது செய்த போலீஸ்….!!!

சுண்ணாம்புக்கல் கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்திலுள்ள வீராணம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த லாரியை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் சுண்ணாம்புக்கல் கடத்தி வந்தது தெரியவந்தது. எனவே காவல்துறையினர் அதில் வந்த ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் அவர் காமராஜ் என்பதும், லாரியின் உரிமையாளர் சக்திவேல், செல்வராஜ் ஆகிய 2 பேர் என்பதும் தெரியவந்தது. பின்னர் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காமராஜை கைது செய்ததோடு சுண்ணாம்புக்கல் மற்றும் லாரியை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *