மணல் சிற்பம் மூலம் மக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ….

ராமநாதபுரத்தில் தேர்தலில் வாக்களிப்பது குறித்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியை அம்மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

மக்களவை தேர்தல் ஆனது  இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று மக்களவைத் தேர்தல் உடன்  சேர்த்து சட்டமன்ற இடைத் தேர்தல்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் அறிக்கைகள் வெளியிடப்பட்டன

இதனை அடுத்து இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குறுதியை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் ஆணையம் மற்றும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோர் இது குறித்துப் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாக்களிப்பது நமது கடமை என்று டுவிட் செய்துள்ளார் மேலும் பிற அரசியல் கட்சித் தலைவர்களும் இது குறித்து பேச வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்

மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு இயக்கங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதனை அடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஆனது நடை பெற்றது இதில் மணல்  சிற்பத்தில் அரசியல்வாதி ஒருவர் மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பது போன்ற காட்சி சித்தரிக்கப்பட்டிருந்தது காசுக்காக வாக்கை விற்கக் கூடாது என்றும் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இந்த மணல் சிற்பத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது இந்த மணல் சிற்பத்தை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மக்கள் பார்வைக்காக திறந்து வைத்தார்.