மணல் திட்டுகளை அகற்றி தூர்வார வேண்டும்… விவசாயிகள் கோரிக்கை…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்பு அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து பாமணி ஆறு, கோரையாறு, வெண்ணாரு என மூன்று ஆறுகள் பிரிந்து நாகை, திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு பாசன வசதி கிடைக்கிறது. மேலும் பாமணி ஆற்றில் சித்தமல்லி, பூவனூர், பரப்பனா மேடு போன்ற பல்வேறு இடங்களிலும் வெண்ணாற்றில் நடுபடுகை, பாப்பையாத்தோப்பு, மேட்டுச்சாலை, அனுமந்தபுரம், பழைய நீடாமங்கலம், ஒட்டக்குடி போன்ற பல்வேறு இடங்களிலும் கோரையாற்றில் ஒரத்தூர், நீடாமங்கலம், பெரியார் தெரு, கண்ணம்பாடி மேலாளவந்த சேரி, முல்லை வாசல், பெரம்பூர், கற்கோவில், வெல்லக்குடி, கீழாளவந்த சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆறுகளின் நடுவில் பெரிய மணல் தீட்டுக்கள் அமைந்துள்ளது.

இந்த திட்டுகளின்  நடுவே செடிகள், மண்டி ஆறுகள், நாணல்கள், மரங்கள் சூழ்ந்து குறுகளாக கால்வாய்களாக தண்ணீர் ஓடுகிறது. ஆறுகளில் மணல் திட்டுக்கள் அதிக இடங்களில் இருக்கின்ற காரணத்தினால் மேட்டூர் அணையில் இருந்து திறந்து  விடப்படும் தண்ணீர் தேங்கி பாசனம் செய்ய முடியாத நிலை இருக்கிறது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆறுகளில் மணல் திட்டுகள் உள்ள இடங்களை பார்வையிட்டு மணல் தீட்டுகளை அகற்றி பாசனத்திற்கு செல்ல ஏதுவாக தூர்வார வேண்டும் என நீடாமங்கலம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave a Reply