சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரும்பாவூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது இரண்டு பேர் டிராக்டரில் மணல் கடத்தியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து மணல் கடத்திய குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் முருகன் மற்றும் பழனிசாமி ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணல் கடத்துவதற்கு பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *