சமுத்திரக்கனி நடிக்கும் ”ரைட்டர்”…… படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு……!!!!

‘ரைட்டர் ‘படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் சமுத்திரகனி. இவர் தற்போது இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ‘நான் கடவுள் இல்லை’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘யாவரும் வல்லவரே’ திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

ரைட்டர் || Writer movie preview

இதனையடுத்து, தற்போது, இயக்குனர் பிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”ரைட்டர்”. கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்த படத்திற்கு பிரதீப் காளிராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *