சாம்சங்கின் மான்ஸ்டர் ஸ்மார்ட்போன் … அதிரவைக்கும் அம்சத்துடன் அறிமுகம் ..!!

இந்தியாவில் சாம்சங் நிறுவனம் தனது புதிய மான்ஸ்டர் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய உள்ளது.

சாம்சங் நிறுவனம் புதியதாக கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன்  6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9611 10 என்.எம். பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் ஆண்ட்ராய்டு பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. 1.5 இயங்குதளம் கொடுக்கப்பட்டுள்ளது.

Image result for samsung m 30

மேலும், இதில் புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் மூலம் உருவாகியிருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் டூயல்-டோன் ஃபினிஷ், பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்களும்,  6000 எம்.ஏ.ஹெச். பேட்டரியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன்  15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், யு.எஸ்.பி. டைப்-சி வழங்கப்பட்டுள்ளது.

Image result for samsung m 30

மேலும், சாம்சங் கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனில்  ஒபல் பிளாக், சஃபையர் புளு மற்றும் பியல் வைட் நிறங்களிலும், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலின் விலை ரூ. 13,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடலின்  விலை ரூ. 16,999 என அந்நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் போன் விற்பனை வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் இந்தியாவின் ஆன்லைன் தளங்களில் விற்பனை நடைபெற உள்ளது.