சாம்சங் நிறுவனத்தின் 64 M.P. கேமரா சென்சார் அறிமுகம்.!!

சாம்சங் நிறுவனம் புதிதாக 64 M.P. கேமரா சென்சார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சென்சார் தற்சமயம் சந்தையில் கிடைக்கும் மற்ற சென்சார்களை விட அதிக ரெசல்யூஷன் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. ISOCELL பிரைட் GW1 சென்சார் சாம்சங்கின் 48 M.P. ISOCELL பிரைட் GW1 கேமரா சென்சார் போன்று 0.8 மைக்ரான் பிக்செல்களை பயன்படுத்துகிறது. இரண்டிற்கும் பிக்சல் அளவு ஒன்றாக இருந்தாலும், புதிய 64 எம்.பி. ISOCELL பிரைட் GW1 சென்சார் அளவில் பெரியதாக உள்ளது.

Image result for Samsung's 64 M.P. Introduction to camera sensor
இதன் காரணமாக போட்டோ எடுக்கும் போது அதிக வெளிச்சத்தை உள்வாங்கும். இதனால் போட்டோ  வழக்கமான சென்சார்களை விட அதிக அளவில் தெளிவாக இருக்கும். இந்த சென்சார் 2019 2 வது அரையாண்டு காலக்கட்டத்தில் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது. அந்த வகையில் இந்த புதிய 64 M.P. சென்சார் சாம்சங்கின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் வழங்கப்படலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் இந்த கேமரா சென்சாரை எதிர்பார்க்கலாம்.
Image result for Samsung's 64 M.P. Introduction to camera sensor
சாம்சங் நிறுவனம் வழக்கமாக தனது கேலக்ஸி நோட் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை ஒவ்வொரு ஆண்டின் 2 வது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. இந்த புதிய சாம்சங் கேமரா சென்சார் குறைவான வெளிச்சம் இருக்கும் பகுதிகளிலும் 16 M.P. தரத்தில் தெளிவான புகைப்படங்களை வழங்கும். இதற்காக டெட்ராசெல் எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது 4 பிக்சல்களை ஒன்றிணைத்து ஒரே புகைப்படமாக வழங்குகிறது.
Image result for Samsung's 64 M.P. Introduction to camera sensor
சாம்சங்கின் 48 M.P. கேமராவும் 12 M.P. தரத்தில் புகைப்படங்களை வழங்குகிறது. இந்த கேமரா சென்சார் 64 M.P. தரத்திலும் புகைப்படங்களை வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. சாம்சங் புதிய 64 M.P. ISOCELL சென்சார் ரியல்-டைம் ஹெச்.டி.ஆர். வசதி கொண்டிருக்கிறது. இது அதிகபட்சம் 100 டெசிபல் திறன் கொண்டிருப்பதால் நிறங்களை மிக நுட்பமாக பிரதிபலிக்கும். புதிய சென்சார் உற்பத்தி பணிகள் 2019 2-வது அரையாண்டு காலக்கட்டத்தில் துவங்கும் என்றும் இது ஸ்மார்ட்போன்களிலும் அதே காலக்கட்டத்தில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *