சாம்சங் நிறுவனமானது 64 எம்பி கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அதிகஅளவு விற்பனை ஆகிவருகிறது. இதுவரை சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ20, கேலக்ஸி ஏ30 மற்றும் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், சாம்சங் நிறுவனம் புதிதாக மூன்று கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
அந்த வகையில் கேலக்ஸி ஏ20எஸ், கேலக்ஸி ஏ30எஸ் மற்றும் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. பிரைமரி கேமரா உள்ளதாக கூறப்படுகிறது. இதில் சாம்சங்கின் சொந்த ISOCELL பிரைட் GW1 சென்சார் வழங்கப்படுகிறது.
ஏற்கனவே ரியல்மி மற்றும் சியோமி நிறுவனங்கள் தங்களின் 64 எம்.பி. கேமரா ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில் சாம்சங்கின் புதிய ஸ்மார்ட் போன்களும் இந்த ஆண்டின் இறுதிக்குள் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் SM-A707F எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என்றும்,
இதில் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் மற்றும் 6 ஜி.பி. ரேம் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. மேலும் மென்பொருளை பொருத்தவரை புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு பை சார்ந்த ஒன் யு.ஐ. கொண்டிருக்கும் என அறியப்படுகிறது .