ஒத்த ஓட்டு தேமுதிக…. கிழிந்து போன முரசு… குளோஸ் ஆன கேப்டன் கட்சி !!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி முடிவுகள் / முன்னிலை விவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை திமுக – காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட வேட்பாளர் இவிகேஎஸ். இளங்கோவன் 61,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நோக்கி இருக்கின்றார்.

அதிமுக 22 ஆயிரத்து 556 வாக்குகள் மட்டுமே எடுத்துள்ளன. மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி 2964 வாக்குகளும், நான்காவது இடத்தில் தேமுதிக 431 வாக்குகளும் பெற்றுள்ளது. இந்த தொகுதியில் 398 தபால் வாக்குகள் பதிவாகியதில் தேமுதிகவிற்கு வெறும் ஒரு வாக்கு மட்டும் கிடைத்துள்ளது. அதேபோல 25 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. 67 வேட்பாளர்களுக்கு ஒரு வாக்குக்கும் கிடைக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.