சம்பளத்துடன் கூடிய விடுமுறை…. ஆஹா சூப்பர் அறிவிப்பு…. பிரபல நிறுவனம் அதிரடி….!!!!

இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் அவரவர் நினைத்த நேரங்களில் விரும்பிய உணவினை உண்டு மகிழ ஆன்லைன் புட்வேர் டெலிவரி நிறுவனங்கள் மிகவும் உதவியாக உள்ளது. அதில் இந்தியாவை பொருத்தவரை ஸ்விகி நிறுவனம் அதிக வரவேற்பை பெற்றுள்ளதுpirapala niruvanam இந்நிலையில் ஸ்விகி நிறுவனத்தில் தினமும் உணவு வினியோகம் செய்யும் பணிகளை கவனித்து வரும் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய இரண்டு நாட்கள் மாதந்திர விடுப்பு அறிவித்துள்ளது.

இந்நிறுவனத்தின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் டெலிவரி பிரதிநிதிகளாக பணிபுரிகின்றனர். இதையடுத்து பெண்கள் மாதவிடாய் காலத்தின் போது ஏற்படும் பிரச்சனைகளால் தான் பெரும்பாலான டெலிவரி செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால்தான் பெண் டெலிவிரி பிரதிநிதிகளுக்கு மாதத்தில் இரண்டு நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அறிவித்துள்ளது என்று அந்நிறுவனத்தின் ஆபரேஷன் பிரிவு துணைத் தலைவர் மிஹிர் ஷா தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து ஸ்விகி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சுத்தமான மற்றும் சுகாதாரமான கழிப்பறை வசதியை ஏற்படுத்துவதற்காக மற்ற உணவகங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இதில் பெட்ரோல் பங்க் நிலையங்களில் கழிவறையை தங்கள் ஊழியர்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் அமைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இரவு நேரங்களில் பெண்கள் உணவு டெலிவரி செய்யவும் அனுமதித்துள்ளது.

ஆனாலும் இரவு நேரங்களில் வரும் ஆர்டரை டெலிவரி செய்யும் போது பெண்களுக்கு பாதுகாப்பு குறைபாடு ஏதும் இருந்தால் அந்த ஆர்டரை அவர்கள் மறுக்க ஆப்ஷனும் வழங்கியுள்ளது. மேலும் மருத்துவ உதவி தேவைப்படும் நேரங்களில் உயிர்காக்கும் உதவிக்கான சேவை அத்தனையும் தங்களது பப்ளிகேஷன்ஸ் உள்ளது. இதில் ஸ்விகி ஹெல்ப்லைன், காவல் நிலையம் மற்றும் ஆம்புலன்ஸ் உதவி போன்ற பல்வேறு வசதிகளை செய்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *