“சமபந்தி விருந்து” கோவில் கோவிலாக சென்று உணவு உண்ட அதிமுக அமைச்சர்கள்..!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் நடைபெற்ற சமபந்தி விருந்துகளில் முதலமைச்சர் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை கேகே நகர் சக்தி விநாயகர் கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு வழிபாடுகளை முடித்து விட்டு அங்கு நடைபெற்ற சமபந்தி விருந்தில் பங்கேற்றார்.  சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற சமபந்தியில்  துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இவர்களை தொடர்ந்து  சென்னை அடையாறு பத்மநாபசாமி கோவிலில் நடைபெற்ற விருந்தில்  அமைச்சர் செங்கோட்டையனும் , சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் அமைச்சர் தங்கமணியும்  பங்கேற்றனர்.

Image result for சமபந்தி விருந்து எடப்பாடி

இதனை தொடர்ந்து சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சபாபந்தி விருந்தில்  அமைச்சர் எஸ் பி வேலுமணியும், சென்னை ராயப்பேட்டை சித்திமுத்தி விநாயகர் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் அமைச்சர் ஜெயக்குமாரும்,  கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன் கோவிலில் நடைபெற்ற  விருந்தில் உடுமலை ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர். மேலும்  இதேபோன்று பல்வேறு கோவில்களில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜு, விஜயபாஸ்கர் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களும் கலந்தும் கொண்டு உணவு உண்டனர்.